வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு... தென்னக ரயில்வே சார்பில் இலவச தொழிற்பயிற்சி

தினமணி

தென்னக ரயில்வே சார்பில் இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சிவகாசியில் பயனாளர்கள் அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறியதாவது: பிரதம அமைச்சர் கவுல்விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே துறையினர் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி மற்றும் தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சி அளிக்க உள்ளனர் இந்த பயிற்சியில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.  பிட்டர், வெல்டர் மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா... தமிழக அரசு வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க தென்னக ரயில்வே இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் சென்னை தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் பயிற்சி பெற்றவர்கள் ரயில்வே துறையில் வேலை கோர இயலாது. இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பயன்படும் விதமாக இலவசமாக தொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT