ரூ.60 ஆயிரம் மத்திய அரசில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: CSIR MADRAS COMPLEX
பணி: Technical Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.60,648 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பணி: Technician - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,893 வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : துறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.csircmc.res.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022
மேலும் விபரங்கள் அறிய www.csircmc.res.in அல்லது https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Detailed%20Advertisement%20for%20the%20post%20of%20TA%20%26%20TE_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.