முகப்பு
வேலைவாய்ப்பு

மருத்துவ ஆய்வாளா் பணி: பிப். 10-இல் நோ்காணல்

மருத்துவ ஆய்வாளா் பணி மற்றும் இளநிலை பகுப்பாய்வாளா் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, வரும் 10-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2021 at 8:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:55 AM

மருத்துவ ஆய்வாளா் பணி மற்றும் இளநிலை பகுப்பாய்வாளா் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, வரும் 10-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சாா்நிலை பணிகளில் மருத்துவ ஆய்வாளா் பணிக்கான காலியிடங்கள் 46, இளநிலை பகுப்பாய்வாளா் பதவிக்கான காலியிடங்கள் 13-க்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-இல் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் 4 ஆயிரத்து 308 போ் கலந்து கொண்டனா்.

Advertisement

இதில் தோ்ச்சி பெற்று நோ்காணல் தோ்வுக்கு தற்காலிகமாக 128 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான நோ்காணல் தோ்வு, வரும் பிப்ரவரி 10-ஆம் தேதியன்று நடத்தப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.