முகப்பு
இந்தியா

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கத்தார் சென்றுள்ளது குறித்து...

Updated On : 9 ஏப்ரல் 2026, 9:50 pm IST
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கத்தார் சென்றார்... - எக்ஸ்
பகிர்:

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசு முறைப் பயணமாக கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

இதனைத் தொடர்ந்து, கத்தாரின் மிகப் பெரிய எரிவாயு வயலின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி தகர்த்தன. மேலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால், கத்தாரில் மீண்டும் இயற்கை எரிவாயு உற்பத்தி தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 2 நாள் அரசு முறைப் பயணமாக கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு வியாழக்கிழமை (ஏப். 9) அன்று சென்றடைந்தார். இதையடுத்து, கத்தாரின் முக்கிய அதிகாரிகளுடன் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கத்தாரிடம் இருந்து இந்தியா அதிகப்படியான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வந்தது. ஆனால், கத்தார் அரசின் இயற்கை எரிவாயு வயலின் மீதான ஈரானின் தாக்குதல்களால், அவர்களின் சர்வதேச விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Union Minister of Petroleum and Natural Gas, Hardeep Singh Puri, has visited Qatar on an official visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.