இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.
இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருந்தார். இம்பாக்ட் வீரர் விதி தனிப்பட்ட முறையில் தனக்குப் பிடிக்கவில்லை என அக்ஷர் படேலும் தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி தங்களது திறமையை வெளிக்காட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்குவதற்கு இளம் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு இளம் வீரராக ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதியை இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக ஜொலிக்க கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாக பார்க்கிறேன். இதனை பலமுறை கூறியுள்ளேன். பலருக்கும் இந்த இம்பாக்ட் வீரர் விதி பிடிக்காது. ஆனால், இளம் வீரர்களுக்கு இந்த விதி மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நான் 8 ஆண்டுகள் செலவிட்டுள்ளேன். அதில் நான்கு ஆண்டுகளில் எனக்கு அதிக அளவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், இம்பாக்ட் வீரர் விதியினால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அதிகரித்துள்ளது என்றார்.