முகப்பு
வேலைவாய்ப்பு

கோயில் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் கோயில் பாதுகாப்புப் பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கோயில் பாதுகாப்புப் பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்திலுள்ள கோயில்களின் பாதுகாப்புப் பணிக்கு 62 வயதுக்குள்பட்ட, விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு காவல் துறை மூலமாக மாதம் ரூ. 7,600 ஊதியமாக வழங்கப்படும்.

Advertisement

பணியில் சேர விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது அடையாள அட்டை, படை விலகல் சான்று, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, உரிய விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments