வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ-ல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி

பொதுத்துறை வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

பொதுத்துறை வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CRPD/APPR/2021-22/10

பயிற்சியின் பெயர்: Apprenticeship Training

காலியிடங்கள்: 6,100

உதவித்தொகை: மாதம் ரூ.15,600

வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழியில் பேசும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட்  மாதம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: செனனை, மதுரை, ஈரோடு, சேலம, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாகர்கோவில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி இ-ரசீது பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2021

மேலும் விவரங்கள் அறிய
https://www.sbi.co.in/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT