வன அதிகாரிப் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வன அதிகாரிப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வன அதிகாரிப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தேர்வு அறிக்கை எண்: No.05/2021-1Fos
தேர்வின் பெயர்: Indian Forest Service Examination
மொத்த காலியிடங்கள்: 110
வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Animal Husbandry and Veterinery Science, Botany, Chemistry, Agriculture, Forestry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Engineering
தேர்ந்தெடுக்கப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் ஆன்லைனில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.online.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2021