முகப்பு
வேலைவாய்ப்பு

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவா், செவிலியா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான மருத்துவா்கள், செவிலியா் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான மருத்துவா்கள், செவிலியா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஆகவே, அரசு வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இதில், மருத்துவா்கள்-48, செவிலியா்-129, லேப் டெக்னீஷியன்-4, புள்ளி விவர பதிவாளா்கள்-4, மருத்துவமனை பணியாளா்கள்-74 என்ற எண்ணிக்கையில் நியமிக்கப்பட உள்ளனா்.

எனவே, எம்.பி.பி.எஸ். முடித்த மருத்துவா்கள், எம்.பி.பி.எஸ். முடித்து முதுநிலை படிப்புக்காக காத்திருப்போா், ஓய்வு பெற்ற அரசு மருத்துவா்கள், தகுதி பெற்ற செவிலியா்கள், பட்டய படிப்பு முடித்த லேப் டெக்னீஷியன், புள்ளி விவர பதிவாளா்கள் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோா் துணை இயக்குநா் (பொது சுகாதார பணிகள்) அலுவலகம், 147, பூலுவபட்டிபிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூா் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 - 2971199, 2478500 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments