முகப்பு
வணிகம்

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

2026 நிதியாண்டில் இந்தியாவில் மொத்த மின்சார இருசக்கர வாகன சில்லறை விற்பனை 24.6 சதவீதம் அதிகரித்து 24.52 லட்சம் வாகனங்களாக உள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 4:20 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 நிதியாண்டில் இந்தியாவில் மொத்த மின்சார இருசக்கர வாகன சில்லறை விற்பனை 24.6 சதவீதம் அதிகரித்து 24.52 லட்சம் வாகனங்களாக இருப்பதாக வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று தெரிவித்தது.

2026 நிதியாண்டு, இந்தியாவின் மின்சார வாகனப் பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்ததையடுத்து, மின்சார வாகனங்களின் விற்பனை 14 லட்சம் வாகனங்களை கடந்த நிலையில், பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 2 லட்சம் வாகனங்களை எட்டும் இலக்கை மிகச் சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டாலும், 2026 நிதியாண்டில் இது 83.63 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது.

இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய மொத்த மின்சார வாகன சில்லறை விற்பனை சுமார் 24.52 லட்சமாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கிட்டத்தட்ட 24.6 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இதில் ஒவ்வொரு பிரிவும் வலுவான இரட்டை இலக்கு வளர்ச்சியைப் பதிவு செய்ததாக வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ். விக்னேஷ்வர் தெரிவித்தார்.

Advertisement

மின்சார பயணிகள் வாகனப் பிரிவில், 2025 நிதியாண்டில் 1,08,873 வாகனங்களாக இருந்த மொத்த விற்பனை, 2026 நிதியாண்டில் 1,99,923 வாகனங்களாக உயர்ந்து, 83.63 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தரவுகளின் அடிப்படையில், மின்சார வாகனப் பிரிவில் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் 'டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள்' நிறுவனம் 2026 நிதியாண்டில் 78,811 வாகனங்களை விறப்னை செய்து முதலிடத்திலும், ஜே.எஸ்.டபிள்யூ - எம்.ஜி. மோட்டார் இந்தியா 53,089 வாகனங்களை விற்பனை செய்து 2வது இடத்திலும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 42,721 வாகனங்களை விற்பனை செய்து 3வது இடத்திலும் உள்ளன.

மின்சார இருசக்கர வாகனப் பிரிவில், 2025 நிதியாண்டில் 11,50,790 வாகனங்களாக இருந்த விற்பனை, 2026 நிதியாண்டில் 14,01,818 வாகனங்களாக உயர்ந்து, 21.81 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

2026 நிதியாண்டில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 3,41,513 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்திலும், பஜாஜ் ஆட்டோ 2,89,349 இருசக்கர வாகனங்களுடன் 2வது இடத்திலும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2,39,178 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

2025 நிதியாண்டில், 6,98,914 வாகனங்களாக இருந்த மின்சார மூன்று சக்கர வாகனப் பிரிவு, 2026 நிதியாண்டில் 8,30,819 வாகனங்களாக உயர்ந்து, 18.97 சதவீத வளர்ச்சியை எட்டியது.

மின்சார வர்த்தக வாகனங்களின் விற்பனை, 2025 நிதியாண்டில் 8,820 வாகனங்களாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டில் அது 19,454 வாகனங்களாக உயர்ந்து, 120.57 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

summary

Total electric vehicle retail sales in India grew by 24.6 per cent at 24.52 lakh units in FY26 as compared to the previous fiscal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments