வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்: RGNIYD/Esst.NT-Reg-Cont/2021-22/002

பணி: Finance Officer - 01
வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200
தகுதி: ICAS, IRAS, IDAS, IP & AS போன்ற துறைகள் ஏதாவதொன்றில் அலுவலராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Section Officer - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்று நிர்வாகம் மற்றும் கணக்கியல் பணியில் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:  Library Assistant - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி:  நூலக அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் வாங்கவெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

பணி:  Library Attendant Cun Typist - 01
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Assistant(On Contract) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant (On Contract) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

மேற்கண்ட இரு பணிகளுக்கும் வயதுவரம்பில்லை. ஓய்வு பெற்ற மதத்திய அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rgniyd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விரைவுத் தபால், கூரியர், மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Registrar(Administration)
Rajiv Gandhi National Institute of Youth Development(RGNIYD)
Bangalore to Chennai Highway, Sriperumbudur-602105. Kanchipuram District. Tamilnadu.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.rgniyd.gov.in/?q=content/applications-are-invited-non-teaching-positions என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT