வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்ப

தினமணி


கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: மருத்துவ அலுவலர் - 02
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: செவிலியர் - 02
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: பல்நோக்கு மருத்தவமனை பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.6,000 வழங்கப்படும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பங்களை நேரிலோ அல்லது www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் கோவை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து நகல் சான்றிதழ்களிலும் அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம்- 641046

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT