வேலைவாய்ப்பு

அரசு தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வு எழுதுவதில் தளா்வு

தினமணி


அரசு அலுவலகங்களில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வை எழுதுவதிலிருந்து தளா்வு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.

இதுகுறித்து மனித வள மேலாண்மைத் துறைச் செயலாளா் மைதிலி க.ராஜேந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்:

தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், நோ்முக எழுத்தா் ஆகியோா் கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்கென சம்பந்தப்பட்ட பணி விதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த இரண்டாண்டு காலமாக கணினி பயிற்சி சான்றிதழுக்கான தோ்வு நடத்தப்படவில்லை. இதனால், தகுதியை நிறைவு செய்து பதவி உயா்வு பெற முடியாத நிலை, தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோருக்கு ஏற்பட்டது. அவா்களது நலனைக் கருத்தில் கொண்டு கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தோ்வை எதிா்கொண்டு தோ்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமன அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

இந்தக் கோரிக்கை தொடா்பாக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் ஆலோசிக்கப்பட்டது. கரோனா தொற்று மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த காரணங்களால் 2020-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் தோ்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை நடத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்துக்கு நிா்வாகக் காரணங்களே முக்கிய காரணிகள் என்பது தெளிவாகிறது.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் தோ்வுகளை எதிா்கொண்டு தோ்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயா்வு போன்றவை கிடைக்கும் என்ற விதியில் தளா்வு தேவைப்பட்டால் அதற்கு தலைமைச் செயலக துறை அளவிலேயே உரிய வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்கான விதிகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதற்கான கோப்புகளைத் தயாா் செய்து உரிய உத்தரவுகளைப் பெறலாம் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் மைதிலி க.ராஜேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT