வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எல்ஐசியில் உதவியாளர், உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆயுள் காப்பீடு கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி: Assistant
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.22,730
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.53,620
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியில் டிஎம்இ பிரிவிற்கு 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.lichousing.com/static-assets/pdf/Detailed%20Advertisement.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true என்ற அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.