வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை...எல்லை பாதுகாப்பு படையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை!

இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள தலைமை காவலர்(ரேடியோ ஆப்ரேட்டர், மெக்கானிக்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள தலைமை காவலர்(ரேடியோ ஆப்ரேட்டர், மெக்கானிக்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Head Constable (Radio Operator)

காலியிடங்கள்: 982

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 19.09.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Head Constable (Radio Machanic)

காலியிடங்கள்: 330

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

உடற்தகுதி: உயரம்: ஆண்கள் 168 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 
மார்பளவு: ஆண்கள் மட்டும் சாதாரண நிலையில் 80.செ.மீ அகலம் இருக்க வேண்டும். 5.செ.மீட்டர் விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஎஸ்எஃப் -ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2022

மேலும் விவரங்கள் அறிய www.rectt.bsf.gov.in கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT