வேலைவாய்ப்பு

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 189 பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தேசிய அலுமினியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 189 பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வருபம் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 189

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Mechanical 58
2. Electrical 41
3. Instrumentation 32
4. Metallurgy 14
5. Chemical 14
6. Mining (MN) 10
7. Civil (CE) 7
8. Chemistry(CY) 13 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 65 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். வேதியியல் பிரிவில் எம்.எஸ்சி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு பயிற்சியின் போது மாதம் ரூ.40,000 - 1,40,000 வழங்கப்படும். பின்னர் மாதம் ரூ.60,000 - 1,80,000 வழங்கப்படும்.

வயது வரம்பு: 11.9.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 'GATE - 2022' நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
  
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.9.2022 மாலை 5:30 மணி.

மேலும் விபரங்களுக்கு : https://mudira.nalcoindia.co.in/rec_portal/Default.aspx அல்லது https://mudira.nalcoindia.co.in/iorms/UploadData/Advertisement/637967950261842921_with%20hindi%20GET%202022%20Advt.pdf

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

பெரியாரின் பேரன்... தவெக மாநாட்டில் விஜய்யின் குரலில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்!

பொறியியல் பணிகள்: புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் 7 நாள்களுக்கு ரத்து

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

SCROLL FOR NEXT