வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கடலோர காவல் படையில், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் தகுதிகள் விவரம்:

பணி: Assistant Commandant (General Duty)

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 011.07.1997க்கும் 30.06.2020க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: Assistant Commandant (Commercial Pilot Licence(SSA))

வயதுவரம்பு: 011.07.1997க்கும் 30.06.2020க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Assitant Commandant (Technical)

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 011.07.1997க்கும் 30.06.2020க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: Naval Architecture, Marine, Mechanical, Auto-mobile, Aeronautical, Electrical, Electronics, Instrumentation, Power Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Commandant(Law Entry)

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: வயதுவரம்பு: 011.07.1997க்கும் 30.06.2020க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.odac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2022

மேலும், உடற்தகுதி, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்களை www.joinindiancoastguard.odac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT