தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?
தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Hydroelectric Power Corporation Limited
விளம்பர எண்.NH/Rectt./05/2021
மொத்த காலியிடங்கள்: 133
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 68
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 34
பணி: Junior Engineer (Mechanical)
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.29,600 - 1,19,500
வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: பெல் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் முழுநேர படிப்பாக படித்து 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம்: ரூ.295. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhpcindia.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2022
மேலும் விவரங்கள் அறிய http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/NHRectt.052021POST_OF_JUNIOR_ENGINEER_E.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு