வேலைவாய்ப்பு

ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் ஓட்டுநர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக உள்ள 23 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக உள்ள 23 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) 

மொத்த காலியிடங்கள்: 23

பணி: Staff Car Driver 

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வானங்கள் ஓட்டுதலில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் பழுது குறித்து தெறிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - ரூ.63,200

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : www.cgwb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Regional Director, CGWB, NCR, Block-l, 4tn Floor, Paryawas Bhawan, Jail Road, Bhopal 462 Oll.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.03.2022 

மேலும் விபரங்கள் அறியவும் www.cgwb.gov.in அல்லது http://cgwb.gov.in/Vacancies/Bhopal.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

SCROLL FOR NEXT