விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவ முகாமில் குரூப் 'சி' வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணுவ முகாமில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவ முகாமில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: MTS(Safaiwala) - 10
பணி: Washerman - 03
பணி: Mess Waiter - 06
பணி: Masalchi - 02
பணி: Cook - 16
பணி: House Keeper - 02
பணி: Barber - 02
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/Write Read Data/ADS/eng-10610-11-0014-2122b.pdf என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: OC, 412 MC/MF Det, Hazrat Nizamuddin, Railway Station - 110 013.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.02.2022