ரூ.2.20 லட்சம் சம்பளத்தில் இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை
இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள Executive Director (Finance) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள Executive Director (Finance) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Director (Finance)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 முதல் 2,18,200
தகுதி: எஸ்ஏஜி அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிதி, கணக்கியல், பட்ஜெட், உள் தணிக்கை மற்றும் கருவூலக் கட்டுப்பாடு போன்ற பிரிவுகளில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.63,840 சம்பளத்தில் SBI வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
வயது வரம்பு: 17.03.2022 தேதியின்படி 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.03.2022
மேலும் விபரங்கள் அறிய https://indianrailways.gov.in அல்லது https://indianrailways.gov.in/railwayboard/uploads/irpersonel/Vacancy_Circular/2022/VN-02-IRCON.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?