வேலைவாய்ப்பு

ரூ.63,200 சம்பளத்தில் பீரங்கி மையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பீரங்கி மையத்தில் (ஆர்டில்லரி சென்டர்) காலியாக உள்ள எம்டிஎஸ், பையர்மேன் உள்ளிட்ட 107 குரூப் 'சி'பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள

தினமணி

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பீரங்கி மையத்தில் (ஆர்டில்லரி சென்டர்) காலியாக உள்ள எம்டிஎஸ், பையர்மேன் உள்ளிட்ட 107 குரூப் 'சி'பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Artillery Centre Nashik

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 107

பணி: LDC - 27
பணி: Model Maker - 01
பணி: Carpenter - 02
பணி: Cook - 02
பணி: Range Lascar - 08
பணி: Fireman - 01
பணி: Arty Lascar - 07
பணி: Barber - 02
பணி: Washerman - 03
பணி:  MTS - 46
பணி: Syce - 01
பணி: MTS Lascar    - 06
பணி: Equipment Repairer - 01

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 21.1.2022 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு, மற்றும் சான்றிதழ்கள்  சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Commandant, Headquarters, Artillery Centre, Nasik Road Camp PIN — 422102

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.01.2022

மேலும் விபரங்கள் அறிய https://indianarmy.nic.in/ அல்லது https://drive.google.com/file/d/1_GcCCp2f2fRBo2Iw9Tfks2vb6aJzbB0I/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT