வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக 8,700 இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசின் நிதி உதவியுடன், முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது.  நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. 

தற்போது நாடு முழுவதும் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் நிரப்பப்பட உள்ள 8,700 இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Army Welfare Education Society

மொத்த காலியிடங்கள்: 8,700 

பணி: TGT(Trained Graduate Teachers)

பணி: PGT (Post Graduate Teacher)

சம்பளம்: சிபிஎஸ்இ விதிமுறையின்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். இளநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்து மத்திய, மாநில அரசின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டும் CTET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 29 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் 40க்குள்ளும், 5 ஆண்டுக்கு அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள் 57க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு கட்டணம்: ரூ.385. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: Army Welfare Education Society நடத்தும் ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் கற்பிக்கும் திறன், கணினி பயன்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.register.cbtexams.in/AWES/Registration என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடைபெறும் தேதி: 19.02.2022 மற்றும் 20.02.2022

தேர்வு நுழைவுச் சீட்டை 10.02.2022 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர்

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 28.02.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

SCROLL FOR NEXT