வேலைவாய்ப்பு

இஎஸ்ஐ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் 3847 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள எம்டிஎஸ், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள எம்டிஎஸ், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 3,847

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மஹாராஷ்டிரா - 594
2. தில்லி - 557
3. தமிழகம் - 385
4. மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் - 320
5. கர்நாடகம் - 282
6. ஆமதாபாத் - 269
7. பஞ்சாப் - 188
8. ராஜஸ்தான் - 187
9. ஹரியானா - 185
10. உத்தரப்பிரதேசம் - 160
11. கேரளம் - 130
12. மத்திய பிரதேசம் - 102 

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 15.02.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, தட்டச்சு தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. மாற்றுத்திறனாளி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 250 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.esic.nic.in/recruitments/index/page:1 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT