வேலைவாய்ப்பு

கணக்கு அலுவலர் நிலை- III பதவி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை-III பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை 

தினமணி



தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை-III பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். 

விளம்பர எண். 618  அறிவிக்கை எண். 14 / 2022

பதவி: கணக்கு அலுவலர் நிலை - III

தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.56,900 - 2,09,200

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 

கட்டணம்:  நிரந்த பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: கணினி வழித் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/AO-%20Tamil%20CBT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT