வேலைவாய்ப்பு

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்

தினமணி

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 143

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Nursing Officer - 106
பணி: Medical Laboratory Technologist - 12
பணி: Junior Administrative Assistant - 13
பணி: Stenographer Grade II - 07
பணி: Junior Engineer (Civil) - 01
பணி: Junior Engineer (Electrical) - 01
பணி: Technical Assistant in NTTC - 01
பணி: Dental Mechanic - 01
பணி: Anaesthesia Technician - 01 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு:  30.03.2022 தேதியின்படி, 27 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 17.04.2022

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: https://jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1500. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.1300 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://jipmer.edu.in/announcement/jobs என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு

வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குண்டடம் அருகே மின்கம்பியில் உரசி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

SCROLL FOR NEXT