முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் பிஇஎம்எல் நிறுவனத்தில் வேலை

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:45 PM
பகிர்:


பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.KP/S/02/2022

பணி: Management Trainee(Grade-II)

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 வழங்கப்படும். 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www,bemliindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2022

மேலும் விவரங்கள் அறிய recruitment@beml.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 080-22963279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.