வேலைவாய்ப்பு

வங்கியில் மேலாளர் வேலை வேண்டுமா? - அழைக்கிறது பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 159 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க

தினமணி

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 159 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Branch Receivables Manager

காலியிடங்கள்: 159 - இதில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

வயதுவரம்பு: 01.03.2022 தேதியின்படி, 23 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டம், டிப்ளமோமுடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in/Career.htm  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-brm-24-03-2022-24-19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT