வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எல்லை பாதுகாப்புப் படையில் பொறியாளர் வேலை

நாட்டின் துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) காலியாக உள்ள 90  ஆய்வாளர், துணை ஆய்வாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

நாட்டின் துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) காலியாக உள்ள 90 ஆய்வாளர், துணை ஆய்வாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 90 

பணி: இன்ஸ்பெக்டர் (ஆர்க்கிடெக்) - 01
பணி: சப் இன்ஸ்பெக்டர் (வொர்க்ஸ்) - 57
பணி: ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) - 32

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம், பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 08.06.2022 தேயின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உடற் தகுதி: உயரம் ஆண்கள் குறைந்தது 160 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு மற்றும்  மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 08.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://bsf.gov.in/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்த சிறுவன் கைது

25 மாநிலங்களில் உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!

உலக ஒற்றுமைக்கான மினி மாரத்தான் ஓட்டம்

வாக்கு திருட்டு விவகாரம்: சிறுபான்மை பிரிவு காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்!

ஏா் இந்தியா விமானத்தில் திடீரென செயல்பட்ட அவசரகால அமைப்பு: பாதுகாப்பாகத் தரையிறக்கம்

SCROLL FOR NEXT