வேலைவாய்ப்பு

ரூ.25,000 சம்பளத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Grdauate Apprentices

காலியிடங்கள்: 102

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.25,000

பயிற்சிக் காலம்: ஒரு ஆண்டு

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பிபிசிஎல் இனையதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்டோரின் மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrcdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் 8.9.2022 தேதிக்கு முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் www.bharatpetroleum.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.09.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT