வேலைவாய்ப்பு

இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? - எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை வடபழநி  அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள 23 இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


சென்னை வடபழநி  அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள 23 இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: இளநிலை உதவியாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிகப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில்   தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி மின் பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: மின்கம்பி பணியாளர் பிரிவில் ஐடிஐ முடித்து மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'எச்' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: நாதஸ்வரம்
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இசைப் பள்ளிகளில் இருந்து தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி அர்ச்சகர் - 9
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடச்சாலையில் தொடர்புடைய துறையில் ஒரு ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி பரிச்சாரகம் - 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழ் மொழியில் எழு, படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயில்களின் பழக்க வழக்கங்களுக்குக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: வேதபாராயணம் - 2
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேடபாடசாலைகளில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2022 தேதியின்படி 18 பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://hrce.tn.gov.in/ என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
துணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை -26

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 04.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT