வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத் துறையில் சூப்பர் வேலை!

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர் தற்காலிக பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும், அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர் தற்காலிக பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஆற்றுப்படுத்துநர்

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,536

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்தத் பிரிவில் ஏதாவதொன்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.  

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-620 704

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 16.09.2022
 
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/08/2022083061.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT