வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு... குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III(தொகுதி-IIIஏ) பணிகளில் அடங்கிய கீழ்வரும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெ

தினமணி


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III(தொகுதி-IIIஏ) பணிகளில் அடங்கிய கீழ்வரும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 636

அறிக்கை எண் 26/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர்(கூட்டுறவுத் துறை)
காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பணி: பண்டக காப்பாளர், நிலை-II(தொழில் மற்றும் வர்த்தகத் துறை)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900
வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: 10 ஆம் வகுப்பு + 12 ஆம் வகுப்பு அல்லது இணைக்கல்வித் தகுதி + இளங்கலை பட்ட என்ற முறையில் பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மற்றும் முன்னுரிமை அளிக்கப்படும் கல்வித் தகுதியினை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150 + தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்த பதிவு இருப்பவர்கள் நிரந்தர பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.01.2023 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது நல்லா இருக்கே...! “போர் நடந்தால் தேர்தல் தேவையில்லையா?” வைரலாகும் டிரம்ப்பின் விடியோ

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

ரூ. 5 கோடி பட்ஜெட்... தலை சுற்ற வைக்கும் வசூல்! என்ன படம்?

கர்நாடகத்தில் ரெட் அலர்ட்! தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT