சென்னை ஐஐடி 
வேலைவாய்ப்பு

சென்னை ஐஐடி-இல் வேலை வேண்டுமா? 24-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். IITM/R/4/2024

பணி: Technical Officer

காலியிடங்கள்: 8

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, ஐடி, கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Technical Superintendent

காலியிடங்கள்: 12

தகுதி: உயிரியல், வாழ்க்கை அறிவியல்(Life Science),வேதியியல், கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருப்பவர்கள், பொறியியல் துறையில் இசிஇ, ஐடி, கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஐஐடி விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruit.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

கல்லூரி மாணவி தற்கொலை

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT