கடற்படையில் வேலை: இளங்கலை, முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகடற்படையில் வேலை: இளங்கலை, முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத இருபாலர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sub Lieutenant(SSC-Executive(IT) Entry-2024
காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 2.1.2000-க்கும் 1.7.2005-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வ வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் CSE, IT, Software Systems, Cyber Security, Networking, Data Analysis போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்திருக்க வேண்டும். எம்சிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் அல்லது எம்.எஸ்சி, எம்சிஏ, எம்.டெக் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களின் விவரம் டிசம்பர் மாத இறுதிக்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரளம் மாநிலம் எழிமலா கடற்படை பயிற்சி மையத்தில் வைத்து ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின் பணி வழங்கப்படும்.
பயிற்சி ஜனவரி 2025 இல் ஆரம்பமாகும்.
என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னிரிமை வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.