இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி தொழில்பழகுநர் (பொறியியல்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தொழில்பழகுநர் பயிற்சி(பொறியியல்)
காலியிடங்கள்: 612 (தமிழ்நாட்டுற்கு 35 இடங்கள்)
பயிற்சி காலம்: 12 மாதங்கள் ஆண்டு
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.25,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 2.3.2026 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனர் பிரிவனர் உள்பட 3 முதல் 15 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அவர்களது சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustanpetroleum.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை தெளிவாக படித்து பார்த்துவிட்டு அளிதில் கொடுக்கப்பட்டிருக்கும் http://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp -லிங்கில் சென்று விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.3.2026
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.