இந்திய ரயில்வே 
வேலைவாய்ப்பு

மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 7,951 பொறியாளர், சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், சூப்பர்வைசர், உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், சூப்பர்வைசர், உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். Centralised Employment Notice (CEN) No. 03/2024

பணி: Chemical Supervisor

பணி: Metallurgical Supervisor

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ. 44,900

வயதுவரம்பு: 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Chemical Supervisor பணிக்கு விண்ணப்பிப்போர் கெமிக்கல் டெக்னாலஜி பாடத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் Petroleum Products, Paints and Corrosion, Prevention Polymers போன்ற ஏதாவதொரு பாடத்தை படித்திருக்க வேண்டும்.

Metallurgical Engineering பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ணலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Depot Material Superintendent

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Chemical & Metallurgical Assistant

தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் அடங்கிய ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 45 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 7934

சம்பளம்: மாதம் ரூ. 35,400

வயதுவரம்பு: 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரி பார்த்தல், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வினாக்கள் அமைந்திருக்கும்.

தேர்வுக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் ரூ.250. பொது, சிபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.8.2024

மேலும் விவரங்கள் அறிய www.indianrailways.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT