கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Ship Draftsman Trainee(Mechanical)
காலியிடங்கள்: 46
Advertisement
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Ship Draftsman Trainee(Electrical)
காலியிடங்கள்: 18
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.9.1999 தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.14,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு சலுகை: உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி. எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.