வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாலுமிப் பணி!
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மாலுமிப் பணி தொடர்பாக...
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மாலுமிப் பணிக்கு தகுதியான திருமணமாகாத ஆண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sailors(SSR Medical Branch) 02/2027
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100
வயதுவரம்பு: 1.5.2005-க்கும் 31.10.2009-க்கும் இடைப்பட்ட தேதியில்(இரண்டு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய கடற்படையால் இரண்டு கட்டங்களாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், மருத்துவத் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல் கட்டத் தேர்வு 2026 மே மாதமும், இரண்டாம் கட்டத் தேர்வு 2027 மார்ச் மாதத்தில் நடைபெறும்.
உடற்தகுதி: உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீட்டரும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டும். 20, 15, 15 எடுக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் நடைபெறும் சரியான தேதி, இடம் குறித்த முழுவிவரம் அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள சில்கா கடற்படை பயிற்சி மையத்தில் 2027 மே முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் பணி வழங்கப்படும்.
உதவித் தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.550. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
INDIAN NAVY INVITES ONLINE APPLICATIONS FROM UNMARRIED MALE CANDIDATES FOR ENROLMENT AS SAILORS FOR SENIOR SECONDARY RECRUITS IN MEDICAL BRANCH (SSR (MEDICAL))