வேலைவாய்ப்பு

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையகரகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு அரசு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தரவு ஆய்வாளர் பணி

DIN

தமிழ்நாடு அரசு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தரவு ஆய்வாளர் பணியிடங்களுக்கு மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: 000718/Admin 1.1/2024

பணி: மூத்த தரவு ஆய்வாளர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.60,000

தகுதி: தகவல் தொடர்பியல்,கணினி அறிவியல் மற்றும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி துறை சாராத பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்தாலும் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, காமராஜர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை - 600 005.

மேலும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது சுயவிவர கடிதம், முகப்பு கடிதம் போன்ற dwda2024@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 2.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT