பொதுத்துறை நிறுவனமான மின் பகிர்மான கழகமான பவர்கிரிடு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். CC/08/2023
பதவி: Engineer Trainee(GATE-2024)
காலியிடங்கள்: 435
பிரிவு வாரியான காலியிடங்கள்:
1. எலக்ட்ரிக்கல் - 331
2. சிவில் - 53
3. எலக்ட்ரானிக்ஸ் - 14
4. கணினி அறிவியல் - 37
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 4.7.2024 தேதிகளின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2024 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பதாரரின் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.