முகப்பு
வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடகம் மாநிலம் உடுப்பில் செயல்பட்டு வரும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூலை, 2024 at 10:42 AM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகம் மாநிலம் உடுப்பில் செயல்பட்டு வரும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Office Assistant

காலியிடங்கள்: 7

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 13.7.1994 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.udupicsl.com அல்லது www.coachinshipyard.in என்ற அதிதாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.7.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

முழு கட்டுரையைப் படிக்க →