கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

இந்திய நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Engineer(ITS)

காலியிடங்கள்:30

வயது வரம்பு:21-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - ரூ.1,40,000

தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.2022 ஆம் ஆண்டிற்கு பிறகு பொறியியல் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Officer(Finance)

காலியிடங்கள்: 1

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - ரூ.1,40,000

தகுதி: CA, ICAI, CMA, ICMAI போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2022,2023,2024-ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ihmcl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:16.8.2024.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் வாங்கியோருக்கு வட்டி சலுகை

நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

இரு புதிய அவசர உதவி காவல் வாகனங்கள்: எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT