கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்

கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சேலம்: கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி கூறியுள்ளதாவது:

கோவை, ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தின் மூலம் நேரு மைதானத்தில் ஆக. 1 முதல் 5 ஆம் தேதி வரை அக்னிவீா் ஜெனரல் டியூட்டி, அக்னிவீா் டெக்னிக்கல், அக்னிவீா் அலுவலக உதவியாளா் / ஸ்டோா் கீப்பா் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு ஆள்தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்னிவீா் டிரேட்ஸ்மேன்களுக்கு 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூா், கோவை ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் முகாமில் கலந்துகொள்வதற்காக அனுமதி சீட்டு பெற்றவா்கள் அதைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். தனி முகவா்கள், விளம்பரதாரா்களின் குறுக்கீடை நம்பி ஏமாற வேண்டாம். தகுதியானா்வா்கள் தோ்வு செய்யப்படுவா்.

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

SCROLL FOR NEXT