சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிஸ் சொசைட்டியில் நிரப்பப்பட்ட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். SETS/Chn/Rec/JRF/2024-25/26
பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 4
தகுதி: Applied Electronics, Applied Mathematics, Information Technology, Cyber Security, Network Security, VLSI Design, Wireless Communication, Computer Science போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE, CSIR-UGC NET போன்ற ஏதாவதொரு போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: எலக்ட்ரானிஸ் சொசைட்டி(SETS) விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.setsindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.6.2024
மேலும் விவரங்கள் அறிய www.setsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.