பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட சிறப்பு அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
பணி: Climate Risk Specialist
காலியிடங்கள்: 2
வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 63,840 - 78,230
தகுதி: Environmental Management, Environmental Science, Climate Change, Climate Finance, Disaster Management, Natural Resource Management, Statistics, Banking & Finance போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Market Risk Specialist
காலியிடங்கள்: 3
வயதுவரம்பு: 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 53,840 - 78,230
தகுதி: CA, ICWA, MBA(Finance) முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers/current.openings என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.6.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.