வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசின் உரங்கள், கெமிக்கல் நிறுவனத்தில் வேலை!

இளநிலை பொறியாளர் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணி

Venkatesan

மத்திய அரசின் உரங்கள் மற்றும் கெமிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Engineering Assistant Grade I

1. Production - 11

2. Mechanical - 3

3. Instrumentation- 4

4. Chemical Lab- 2

சம்பளம்: மாதம் ரூ. 23,000 - 56,500

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Chemical, Chemical Technology, Mechanical, Instrumentation and Control, Electronics and Instrumentation, Electronics and Electrical, Applied Electronics and Instrumentation, Electronics and Communication, Electronics and Control Engineering பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Physics பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineering Assistant Grade II

1. Production - 6

2. Electrical - 1

3. Instrumentation - 2

சம்பளம்: மாதம் ரூ. 25,000 - 77,000

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Chemical, Chemical Technology, Electrical or Electrical and Electronics, Instrumentation and Control, Electronics and Instrumentation, Control and Industrial Instrumentation, Process Control Instrumentation, Process Control Instrumentation, Applied Electronics and Instrumentation பிரிவில் டிப்ளமோ முடித்து 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல், இயற்பியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிக்க வேண்டும்.

பணி: Officer Assistant Grade III

காலியிடங்கள்: 6

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 23,000 - 56,500

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்.ஆபிஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அப்ளிகேசனில் சான்றிதழ் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்..

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rfcl.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

போக்ஸோவில் பள்ளிக் காவலாளி கைது

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT