வேலைவாய்ப்பு

இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க!

DIN

இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1930 செவிலியர் அதிகாரிக்கு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 52/2024

பணி: Nursing Officer

காலியிடங்கள்: 1930 (UR-892, EWS-193, OBC-446, SC-235, ST-164)

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பி.எஸ்சி செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஜிஎன்எம் படிப்புடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். செவிலியர் படிப்பை இந்திய செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: 7 ஆவது சம்பளக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி-ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 7.7.2024

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

”பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்” - பகவந்த் மான்

ரவி ஒரு சகலகலா வல்லவன்! - சிவ ராஜ்குமார்

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

SCROLL FOR NEXT