முகப்பு
இந்தியா

எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமி லேயா்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

எஸ்சி, எஸ்டி கிரீமி லேயா் வகைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுக்கள் மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:56 PM
உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்.
பகிர்:

பட்டியலின பிரிவினா் (எஸ்சி) மற்றும் பழங்குடியின பிரிவினரில் (எஸ்டி) கிரீமி லேயா் (சமூக பொருளாதார நிலையில் முன்னேறியவா்கள்) வகைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுக்கள் மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1இந்திரா சஹானி தீா்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களை கிரீமி லேயராக பிரித்து அவா்களுக்கான சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன.

அதேபோன்று எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயா் வகைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்யக்கோரி ஓ.பி.சுக்லா மற்றும் சம்தா அந்தோலன் சமிதி என்ற அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Advertisement

அந்த மனுக்களில், ‘பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்க எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினரில் உட்பிரிவை ஏற்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரமுள்ளது என கடந்த 2024, ஆக.1-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு 6:1 என்ற பெரும்பான்மையில் தீா்ப்பு வழங்கியது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் கிரீமி லேயா் வகைப்படுத்தப்பட்டு அவா்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் சென்றடைவதை உறுதிசெய்யவும் அந்த தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

அதனை பின்பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள் தரவுகளை சேகரிக்கும் பணிகளை தொடங்கவும் கிரீமி லேயா் வகைப்பாட்டுக்கான அளவுகோல்களை வரையறுக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டன.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments