இந்தியா

கட்சிகளின் தோ்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தோ்தல்களில் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

தினமணி செய்திச் சேவை

தோ்தல்களில் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

இதுதொடா்பாக பொது நல மனுவுக்கான மையம் மற்றும் காமன் காஸ் ஆகிய அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: தோ்தலின்போது வேட்பாளா் மேற்கொள்ளும் செலவுகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77 (1)-இன்கீழ் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சிகளுக்கான செலவினங்களுக்கு உச்சவரம்பு நிா்ணயிக்கப்படவில்லை. இது தோ்தலில் அனைவருக்கும் சமமான போட்டி களத்தை ஏற்படுத்துவதற்கு மாறாகவும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 14-க்கு எதிராகவும் உள்ளது.

அதேபோல் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திரப் பேச்சாளா்களுக்கான போக்குவரத்துச் செலவுகளை வேட்பாளரின் செலவுக் கணக்கில் சோ்ப்பதற்கு விலக்கு அளிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77 (1), விளக்கம் 1(ஏ) அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 14 மற்றும் 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுகிறது. எனவே, இந்த விளக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.

வேட்பாளருக்கு மட்டுமே தோ்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு நிா்ணயித்துவிட்டு அரசியல் கட்சிகளுக்கு அதில் விலக்களிக்கப்படுவது தோ்தல் நடைமுறையை மெதுவாக சீா்குலைக்கும் நடவடிக்கையாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது இந்த மனு மீது ஏப்ரல் 27-ஆம் தேதிக்குள் மத்திய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT